அரசு மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

பெருகிவரும் வைரஸ் தொற்றை கட்டுபடுத்த காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் , புறநோயாளிகள் பிரிவில் தொடர்ச்சியாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-01-11 04:15 GMT

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிரமாக நடைபெற்று வரும் கிருமிநாசினி தெளிக்கும் பணி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 1ஆம் தேதி 35 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த பத்து தினங்களில் மெல்ல மெல்ல அதிகரித்து  காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாதிப்பு பத்து மடங்காக உயர்ந்துள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் தனிமனித இடைவெளி மற்றும் அரசு வழிகாட்டு நெறிகளை கடைபிடிக்க மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி காஞ்சி மாவட்ட பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிக்க மாநகராட்சி மற்றும் காவல்துறை வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இந்நிலையில்  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும்  ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் என வரும் நிலையில்  நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நுழைவுவாயில், புறநோயாளிகள் பிரிவு பகுதிகளில் தொடர்ச்சியாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கென இரு தொழிலாளர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர். மேலும் நுழைவுவாயிலில் முடக்கவும் அணிந்த பின்பே காவலர்கள் மருத்துவமனைக்குள் அனுப்பி வைக்கின்றனர்.

Tags:    

Similar News