சிறுகாவேரிப்பாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு..

Supplyco Paddy Procurement-காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் 10 கிராமங்களில் விளைந்த நெல்களை கொள்முதல் செய்யும் நோக்கில் இங்கு திறக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-22 03:05 GMT

Supplyco Paddy Procurement

Supplyco Paddy Procurement-காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சொர்ணாவாரி பருவத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விலை நிலங்களில் நெல் பயிரிடப்பட்டது. இதன் அறுவடை காலம் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை கடந்த பருவத்தைப் போல் இந்த பருவத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் செய்ய 31 மையங்கள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்த நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று திறக்கப்பட்டது.

இதனை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன்,  காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் இணைந்து கொள்முதல் பணியை துவக்கி வைத்தனர்.

இதன் மூலம் தாமல், பாலு செட்டி சத்திரம் திருப்புகுழி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில்  ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்பட்ட நெல் மூட்டைகளை இங்கு கொள்முதலுக்கு எடுத்து வரும் நிலை உள்ளது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஒன்றியக் குழு தலைவர் மலர்கொடி குமார், துணைத் தலைவர் திவ்யப்பிரியா இளமது, காஞ்சி தெற்கு ஒன்றிய  செயலாளர் பி.எம்.குமார், திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் விவசாயிகள் நுகர்வோர் வாணிபக் கழக அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News