சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை மாநகராட்சி பறிமுதல் செய்தால் திருப்பி தராது

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை மாநகராட்சி பறிமுதல் செய்தால் திருப்பி தராது என காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-12 10:30 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருகிவரும் தொழிற்சாலைகள் குடியிருப்பு பகுதிகளால் விவசாய பகுதிகள் குறைந்தும் , கால்நடை தீவனங்களின் விலை உயர்வால் கால்நடை உரிமையாளர்கள் கால்நடைகளை அவிழ்த்து விட்டு விடுவதால் நகரின் சாலைகளிலும் , தேசிய , மாநில சாலைகளிலும் கால்நடைகள் சுற்றி திரிகிறது.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகன விபத்திலும் கனரக லாரிகளின் அதிவேகத்தால் கால்நடைகள் விபத்துக்குள்ளாகி இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணனிடம்  இதுகுறித்து கேட்டபோது , காஞ்சிபுரம் நகரில் உலவும் கால்நடைகளால் விபத்து மற்றும் சீர்கேடு நிலவுகிறது எனவும் , இதனை தடுக்கும் விதத்தில் கால்நடை உரிமையாளர்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் எச்சரிக்கை விடப்பட்ட உள்ளது.

தற்போது மாநகராட்சி பல்துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இனி வரும் காலங்களில் நகரில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் அதனை நகராட்சி மூலம் பறிமுதல் செய்யப்பட்டு பசு பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் அதனை திருப்பித் தரப்பட மாட்டாது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News