காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு ஹூண்டாய் ஃபவுண்டேஷன் கொரோனா தடுப்பு உபகரணங்கள்!

காஞ்சிபுரம் ஹுண்டாய் சார்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டி மற்றும் கொரோனா பரவல் தடுப்பு பொருட்களை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

Update: 2021-06-12 10:25 GMT

ஹூண்டாய் நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் அரசு மருத்தவமனைக்கு எழிலரசன் எம்எல்ஏ முன்னிலையில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய காட்சி.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சமூக சேவை பிரிவாக செயல்படும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு 25 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 3,100 சுயபாதுகாப்பு பொருட்கள், 5,000 என்-95 முகக்கவசங்கள், 700 ஆக்ஸி மீட்டர்கள் மற்றும் 600 லிட்டர் கிருமிநாசினி திரவம் ஆகியவற்றை  வழங்க திட்டமிடப்பட்டது.

இன்று மருத்துவமனை வளாகத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் முன்னிலையில், மருத்துவமனையின் இணை இயக்குனர் டாக்டர் 'ஜீவாவிடம் ஹுண்டாய் புவுண்டேஷன் நிர்வாக குழு உறுப்பினர் கணேஷ்மணி வழங்கினார்.

ஹூண்டாய் கேர்ஸ் 3.0 திட்டத்தின் கீழான 'Back to Life' மூலம் இந்தியா முழுவதும் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க உயிர்காக்கும் ஆக்ஸிஜன் உபகரணங்கள் வாங்கப்பட்டு விரைவாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News