காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி உதவி

காஞ்சிபுரத்தில் நடந்த தேசிய கைத்தறி விழாவில் கைத்தறி நெசவாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.

Update: 2022-08-07 08:00 GMT

காஞ்சிபுரத்தில் நடந்த  8வது தேசிய கைத்தறி தின விழாவில் நெசவாளர்களுக்கு கைத்தறி துறை துணை இயக்குனர் தெய்வானை உபகரணங்கள் வழங்கினார்.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள நெசவாளர் சேவை மையம் சார்பில் எட்டாவது தேசிய கைத்தறி தின விழா தனியார் திருமண மண்டபத்தில் உதவி இயக்குனர் சசிகலா தலைமையில் நடைபெற்றது.

இதில் மத்திய அரசின் நெசவாளர்கள் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தும் பட்டியல் சான்றிதழ் பெற்ற நபர்களுக்கு பொன்னாடை போர்த்தி கைத்தறி துறை துணை இயக்குனர் தெய்வானை வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் கைத்தறி நெசவாளர்களுக்கு‌ உபகரணங்கள் , அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. மேலும் நெசவாளர்களின் குறைகளையும் இந்நிகழ்வில் கேட்கபடாடு அதற்கான பதில்கள் அளிக்கப்பட்டது.

விழாவில் பேசிய நெசவாளர் சேவை மையம் உதவி இயக்குனர் சசிகலா , இதுவரை 42 ஆயிரம் நெசவாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் ,  மத்திய அரசின் சார்பில் முத்ரா கடன் உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் நெசவாளர் குடும்பங்களில் உள்ள மாணவ மாணவியர்கள் ஜவுளித்துறை சார்ந்த பட்டய மேற்படிப்பு படிப்பதற்கு கல்வி உபயோகத்துக்காக ரூ. 2 லட்சம் வழங்கப்படும் காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி பேஷன் டிசைனிங் படிப்புக்காக இதனை பெற்று தனது படிப்பில் தேசிய அளவில் நான்காவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது  என தெரிவித்தார்.

மேலும் நெசவாளர்கள் தங்கள் குறைகளை எழுத்துப்பூர்வமாக அளித்தால் அதை உரிய முறையில் பரிசீலனுக்கு அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தகவல்கள் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் நெசவாளர்கள் 423 பேர் உபகரணங்கள் மானிய விலையில் பெற விண்ணப்பித்துள்ளதாகவும் , அதனை மத்திய அரசு பார்வைக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் பட்டு கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் ஆனந்த் , பட்டு பூங்கா முதன்மை செயல் அலுவலர் ராமநாதன் ,  பட்டு 

Tags:    

Similar News