பல்லவன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்.

பொது மருத்துவம், நீரழிவு , இயன்முறை , நுரையீரல், நெஞ்சகம் உள்ளிட்ட நோய்களுக்கான சிறப்பு பரிசோதனை ஆலோசனை வழங்கப்படுகிறது.

Update: 2022-04-10 03:30 GMT

காஞ்சிபுரம் பல்லவன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்கள்

காஞ்சிபுரம் பல்லவன் சிட்டி லயன்ஸ் சங்க மாவட்ட அவைச் செயலாளர் பாலுச்சாமி மற்றும் சங்க தலைவர் பத்மநாபன் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம், பாண்டவ பெருமாள் வடக்கு மாடவீதியில் இன்று நடைபெற்றது.

இம்முகாமில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு நோய் மருத்துவமனை எஸ் எம் பிசியோகேர் உள்ளிட்ட மருத்துவமனைகள் பங்கேற்றன. முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பொது மருத்துவம் , இயன் முறை மருத்துவம்,  நுரையீரல் , ஆஸ்துமா , நெஞ்சகம்  மற்றும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது .

மேலும் மூச்சுக் குழாய் தூக்கமின்மை ஆகிய பிரச்சனைகளுக்கு இத்துறையின் சிறப்பு மருத்துவர் டாக்டர் சுரேஷ்குமார் பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

நிகழ்ச்சிகளை காஞ்சிபுரம் பல்லவன் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் வி பத்மநாபன் , செயலாளர் V.சீனிவாசன் , பொருளாளர் துரைராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News