காஞ்சிபுரத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்: எம்எல்ஏ எழிலரசன் வழங்கல்

தமிழக‌அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.

Update: 2022-08-08 09:30 GMT

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் விலையில்லா மிதி வண்டிகளை பள்ளி மாணவர்களுக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் வழங்கினார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அவ்வகையில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கல்வி கற்கவும் , உடல்நிலை மேம்பட ஏதுவாக விலையில்லா மிதிவண்டி வழங்கப்படுகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கடந்த மூன்று நாட்களாக பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு விளையில்லா மிதி வண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் வழங்கினார்.

அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் 456 மாணவர்களுக்கும் தாமல்வார் தெரு பகுதியில் அமைந்துள்ள மரியா அக்ஸிலம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 159 மாணவிகளுக்கும் , எஸ்.எஸ்.கே.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 292 மாணவிகளுக்கு என மொத்தம் 907 விலையில்லா சைக்கிள்களை  வழங்கினார்.

இவ்விழாவில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் , மாமன்ற உறுப்பினர்கள் சந்துரு ,  சுரேஷ் , கமலக்கண்ணன்  , இலக்கியாசுகுமார் ,  நிர்மலா மற்றும் திமுக நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் , பகுதி செயலாளர் திலகர் , தசரதன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News