அத்திவரதர் வைபவம் 3-ம் ஆண்டு நிறைவு தினத்தில் முன்னாள் ஆட்சியர் பொன்னய்யா சாமி தரிசனம்...!

காஞ்சிபுரத்தில், கடந்த 2019 ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளிய 3 ம் ஆண்டு தினம் இன்று.

Update: 2022-07-01 04:45 GMT

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் அமைந்துள்ள அனந்தசரஸ் குளம் பின்னணியில் அர்ச்சகருடன் புகைப்படம்‌ எடுத்துக்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியரும், நகராட்சி நிர்வாக ஆணையருமான பொன்னையா.

கோவில் நகரமாம் காஞ்சிபுரத்தில் புகழ் பெற்ற வைணவத் தளங்களில் ஒன்றாக ஸ்ரீ காஞ்சி வரதராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் இங்குள்ள ஆனந்தசரஸ் குளத்தில் அத்திமரத்தால் ஆன வரதர் சயன கோலத்தில் உள்ளார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2019 ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார்.

இதையடுத்து. சயன கோலத்தில் 30 நாட்கள், நின்ற கோளத்தில் 18 நாட்கள் என கோடிக்கணக்கான மக்கள் தரிசனம் செய்த நிகழ்வு உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. இந்த வைபவத்தின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த பா.பொன்னையா அனைத்து ஏற்பாடுகளும் திறம்பட செய்து பெரும் பாராட்டை பெற்றார். இந்நிலையில் மூன்றாண்டுகள் நிறைவு மற்றும் நான்காம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு, தற்போது நகராட்சி நிர்வாக இயக்குனராக இருக்கும், முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஸ்ரீ காஞ்சி வரதராஜர் கோவிலில், சுவாமியை பக்திப்பெருக்குடன் தரிசனம் செய்தார்.

அதன்பின் நீரால் நிரம்பியுள்ள அனந்த சரஸ்குளத்தில் சயனத்தில் இருக்கும் அத்தி வரதரை குளக்கரையில் இருந்தபடியே தரிசித்தார். பின்னர் கோவில் முழுவதும் சுற்றி வந்து நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். இதையடுத்து அவர் கோவில் அர்ச்சகருடன்  எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களிலும் பரவி அத்திவரதர் வைபவத்தை பக்தர்கள் இடையே நினைவூட்டி வருகிறது. 


Tags:    

Similar News