காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை : கலெக்டர் மா.ஆர்த்தி

காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் பாலாற்றின் இருபுறமும் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை கலெக்டர் ஆர்த்தி விடுத்துள்ளார்.

Update: 2021-10-23 13:30 GMT

காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  மா.ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில் ,

ஆந்திரா சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலவாகுண்டா நீர்த்தேக்கத்தில் இருந்து சுமார் 4500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இது பாலாற்றின் இடதுப்புற கிளை நதியான பொன்னை நதியில் பாய்ந்து இரவு 10 மணியளவில் பொன்னை அணையை வந்தடையும்.

எனவே, காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், உத்திரமேரூர் வட்டம் மற்றும் வாலாஜாபாத் வட்டத்தில் பாலாற்றின் இருபுறமும் உள்ள கிராமங்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை பாதுகாப்பான இடங்கள் / நிவாரண முகாம்களில் தங்க வைக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்படி வெள்ள அபாயத்தினை உணர்த்தும் பொருட்டு ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும், வெள்ளத்தில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, வேடிக்கை பார்க்கவோ, புகைப்படம் எடுக்கவோ, ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் இறங்கவோ மற்றும் வீட்டில் உள்ள சிறுவர் / சிறுமிகளை ஆற்றின் அருகில் செல்லாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

கால்நடைகளை ஆற்றிற்கு செல்லாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு தண்டோரா மூலமாகவும், ஆட்டோ ஒலிபெருக்கி மூலமாகவும் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் (காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத்) மற்றும் நகராட்சி ஆணையர் மூலமாகவும் எச்சரிக்கை விடுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பாதிப்புகள் குறித்த அறிக்கையினை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் காஞ்சிபுரம், உத்திரமேரூர், மற்றும் வாலாஜாபாத் உடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News