குளங்களில் தாமரை பூ ஏலத்தில் அதிகாரிகள் மெத்தனம்: காஞ்சிபுரம் ஆட்சியர் கூட்டத்தில் விவசாயி கடும் குற்றச்சாட்டு

ஸ்ரீ பெரும்புதூர் அருகே ஏரி, குளங்களில் தாமரை பூக்கள் ஏலத்தில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என, காஞ்சிபுரம் ஆட்சியர் கூட்டத்தில் விவசாயி குற்றம்சாட்டி பேசினார்.

Update: 2022-06-24 07:45 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்ற விவசாய நலன்காக்கும் கூட்டம்.  (உள்படம்) அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு கூறி பரபரப்பு ஏற்படுத்திய ராமானுஜபுரம் விவசாயி.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நல்லுறவு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்தரய்யா தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், விவசாயிகள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மேலும் விவசாயம் சார்ந்த நலத்திட்டங்கள் குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு எடுத்து கூறினர்.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், ராமானுஜபுரம்  கிராமத்தைச் சேர்ந்த ரஜினி குமாரவடிவேல் பேசுகையில், தனது கிராமத்தில் ஸ்ரீபெரும்புதூர் பாசன கோட்டத்தின் கீழ் உள்ள ஏரி மற்றும் குளத்தில் லட்சக்கணக்கான தாமரைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்றும், இதனை முறையாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுஏலம் விட்டு அரசுக்கு வருவாய் ஈட்டுவது வழக்கம் எனவும், இந்நிலையில் இந்த ஏல நிகழ்வுகளை முறையான காரணங்கள் இன்றி தவிர்த்து வருவதாகவும், இதனால் பல லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மேலும், ஏலத்தை நடத்தாமல், தாமதம் செய்வதால், பலர் முறைகேடாக பூக்களை பறித்து விற்பனை செய்து வருவது வருத்தம் அளிப்பதாகவும், தற்போது அதிக அளவில் பூக்கள் தேவை என்பதால் விரைவாக பொதுப்பணித்துறை ஏலம் விட ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். மேலும் முறைகேடுகளுக்கு அதிகாரிகள் துணை போகின்றனரா? என விவசாயி ரஜினி குமார வடிவேல் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேசிய ஆட்சியர் ஆர்த்தி, ஓரிரு நாளில் இந்த ஏலத்தை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார

Tags:    

Similar News