மின் கம்பம் விவகாரம்: பல முறை அறிவுறுத்தியும் அலட்சியத்தில் ஒப்பந்ததாரர்கள்

கடந்த மாண்டஸ் புயலில் தாயார்குள சிறு மேம்பாலம் சேதமடைந்து நிலையில் புனரமைக்கும் பணியில் மின் கம்பத்தோடு சேர்த்து தடுப்பு சுவர் அமைத்துள்ளனர்.

Update: 2023-01-23 06:45 GMT

தாயார்குளம் பகுதியில் மேம்பால புணரமைப்பின் போது உயர் மின் அழுத்த மின்கம்பத்தோடு சேர்த்து தடுப்பு சுவர் அமைத்துள்ளனர்.

கடந்த நவம்பர் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவங்கி சராசரி மழை அளவைவிட அதிக அளவில் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து மாண்டாஸ் புயல் ஏற்பட்டு தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் பாலாறு செய்யாறு மற்றும் வேகவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் மிகுந்த சேதம் அடைந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 281 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. இது மட்டும் இல்லாமல் ஊரகத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறு , ஏரி குளங்கள், கன்மாய் உள்ளிட்டவைகளும் நிரம்பி விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பு தேவைகளுக்கு பயனுள்ளதாக அமைந்தது.

காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் மாகரல் அடுத்துள்ள செய்யாறு தற்காலிக பாலம் மீண்டும் இத்தருணத்தில் மூன்று முறை சேதமடைந்தது. இதனால் பொது போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு புனரமைக்கு பின் தற்போது பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது, கனரக வாகனங்களுக்கு தற்போது வரை அனுமதியில்லை.

மேலும் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் இரு சிறு பாலங்கள்  சேதமடைந்தும் , நீர் செல்ல ஏதுவாக ஒரு பாலம் உடைக்கப்பட்டும் நீர் வெளியேற்றப்பட்டது.

நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளதால் தாயார் குளம் சிறு மேம்பாலம் புணரமைப்பு பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கியது. வீராணம் குழாய் பைப்புகள் ஐந்து ஆற்றின் குறுக்கே வைக்கப்பட்டு அதனை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆற்றுப் பாலத்தின் இரு பகுதிகளிலும் நீர் உட்புகா வண்ணம் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு அதற்கான ஜல்லி போடும் பணியும் நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் இருந்த உயர் மின்னழுத்த கம்பத்தை வேறு இடத்துக்கு மாற்றாமல் அதை சுற்றி அதனுடன் இணைத்து தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வேலூர் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்கம்பத்தை  அகற்றாமல் கால்வாய் பணி , குழாய் பைப்புகளை சுற்றி கான்கிரீட் பணி அமைக்கப்பட்டது பெரும் கண்டனத்துக்கு உண்டான நிலையில், தமிழக அரசு இதுகுறித்து ஒப்பந்ததாரர்களுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை அளித்தது.

இந்நிலையில் இப்பகுதியில் அரசு விதிகளை அலட்சியப்படுத்தி மின் கம்பங்களை மாற்ற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்பதால் பனிக்காலம் நீட்டிக்க வேண்டிய சூழ்நிலையில் ஒப்பந்ததாரர் சற்றும் கம்பெனிகளை மேற்கொள்ளாமல், அரசு  விதிகளை  அலட்சியப்படுத்தி மின்கம்பத்தோடு இணைத்து தடுப்பு சுவர் அமைத்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்பணிகளை கண்காணிக்க தவறியதாக மாநகராட்சி பொறியாளர் குழு மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News