கள்ள சாராயத்தை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-05-29 10:23 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் விற்பனையாகும் கள்ளச்சாராயத்தையும்,சட்ட ஒழுங்கு சீர்குலைவை தடுக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் விற்பனையாகும் கள்ளச்சாராயத்தையும்,சட்ட ஒழுங்கு சீர்குலைவை தடுக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசை பதவி விலக வலியுறுத்தி கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த அ.தி.மு.க .பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் தலைமையில் மாவட்ட, ஒன்றிய ,பேரூர் கழக நிர்வாகிகள் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழகத்தில் விற்பனையாகும் கள்ளச்சாராயத்தையும் கள்ளச்சாராய உயிர் உறுப்புகளையும்,சட்ட ஒழுங்கு சீர்குலைவையும் தடுக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான தி,மு,க, அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன்,  மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் எம்,எல்,ஏ, மதனந்தபுரம் பழனி, மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே .யு .எஸ் சோமசுந்தரம் , மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி ஆர் மணிவண்ணன் ,  எம் ஜி ஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் எஸ் எஸ் ஆர் சத்யா மற்றும் முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News