ஊரடங்கு : விதிமுறைகளை மீறியதாக 126 வழக்குகள் பதிவு - எஸ்.பி எம். சுதாகர்

மாவட்ட முழுவதும் 46 இடங்களில் வாகன சோதனையும், 1100 போலீசார் பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-01-09 03:45 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அறிவித்து உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுப் போக்குவரத்தை நிறுத்தி அனைத்து கடைகளையும் அடைத்து முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்த உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு உத்தரவு காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நாற்பத்தி ஆறு இடங்களில் வாகன சோதனையும் நடைபெற்று வரும் நிலையில் 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் நகரில் முக்கிய முக்கிய சாலைகள் ஆன காந்தி சாலை, நெல்லுக்கார தெரு, ராஜ வீதிகள், காமராஜர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு நகர் முழுவதும் வெறிச்சோடிக் கிடக்கிறது.

மாவட்டம் முழுவதும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் வாலாஜாபாத் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதைத் கண்காணித்து வருகின்றனர். காலை 5 மணி முதல் மாவட்டம் முழுவதும் விதி மீறியதாக நூத்தி இருபத்தி ஆறு வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் தெரிவித்தார்.

Tags:    

Similar News