மாநகராட்சி முன்பு ஒப்பந்த ஊழியர் தீக்குளிக்க முயற்சி

காஞ்சிபுரம் மாநகராட்சி ஒப்பந்த ஊழியருக்கு ஆறு மாத சம்பளம் வழங்காததை கண்டித்து ஊழியர் பெருமாள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

Update: 2022-07-01 09:45 GMT

தீக்குளிக்க முயன்ற பெருமாள்.

காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றியுள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் நாராயணன் நேற்று பணியிட மாறுதல் காரணமாக ஒப்பந்த ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஆறு மாதம் சம்பளம் பாக்கி உள்ள அந்த சம்பளத்தை உடனே வழங்க கோரி மண்ணெண்ணெய் கேனுடன் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் பெருமாள் தீ குளிக்க முயன்றார். இதை பார்த்த அருகில் இருந்த பத்திரிக்கையாளர்கள் தடுத்து நிறுத்தி பெருமாளை காப்பாற்றினர்.

இதனை தொடர்து ஆறு மாதம் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பெருமாள் புறப்பட்டு சென்றார். இந்த பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மேயர் ஆணையர் ஆகியோருடன் மாநகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நகராட்சி நிர்வாக இயக்ககுனர் பொன்னையா காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக்கு வந்த பொது மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News