காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 500 இடங்களில் காெராேனா சிறப்பு தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 500 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

Update: 2021-11-20 12:15 GMT

பயனாளிக்கு காெராேனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா நோயை தடுப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்படுவது மட்டுமல்லாமல் அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியினை 7 இலட்சத்து 17 ஆயிரத்து 567 பேரும், 3 லட்சத்து 04 ஆயிரத்து 156 நபர்கள் இரண்டாம் தவணையும் இதுவரை செலுத்திக் கொண்டு உள்ளனர். மேலும் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 583 நபர்களுக்கான சிறப்பு முகாம் நாளை மாவட்டம் முழுவதும் 500 இடங்களில் செயல்பட உள்ளது.

இதனை முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தத் தவறிய நபர்கள் விரைவாக செலுத்திக் கொண்டு மற்ற நபர்களுக்கு பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News