ஆட்சியர் ஊழியர்கள் திறமையாலால் மக்கள் நல திட்ட உதவிகளை எளிதில் பெறுகின்றனர்

கோரிக்கை மனுக்களை நேரடியாக கள ஆய்வு செய்து உடனடியாக மனுக்கள் மீது தீர்வு நடைபெறுவதாக அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்

Update: 2022-06-25 17:30 GMT

வாலாஜாபாத்தில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் தா மோ அன்பரசன்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சுமார் 10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா மோ அன்பரசன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் பேசிய அமைச்சர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை 70% மனுக்கள் விரைவாக பரிசீலனை செய்யப்பட்டு அதை முற்றிலும் ஆய்வு மேற்கொண்டு தற்போது பொதுமக்களுக்கு குறைந்த கால அவகாசத்தில் நலத்திட்டங்களை பெறுகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அவர் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொது மக்களுக்கு சிறப்பான சேவை செய்கின்றனர்.

அமைச்சர் உள்ளிட்ட எந்த அரசியல் பிரமுகர்கள் , பொதுமக்கள் ஏதேனும் கோரிக்கை வைத்தால் அதை நேரடியாக கள ஆய்வு செய்து அதற்கு உரிய அலுவலர்கள் அதற்கான பணிகளை திறம்பட செய்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறைந்த காலகட்டத்தில் அதிக அளவு பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தது அமைச்சர் உள்ளிட்ட அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.


Tags:    

Similar News