தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்தில் ஆட்சியர்,போலீஸ் எஸ்.பி. பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் குமரக்கோட்டம் திருக்கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.

Update: 2023-03-29 11:50 GMT

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, போலீஸ் எஸ்.பி. சுதாகர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் குமரக்கோட்டம் திருக்கோயிலில் நடந்த  தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, எஸ்.பி சுதாகர் பங்கேற்று பொதுமக்களுடன் அமர்ந்து  உணவருந்தினர்.

தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிப்பு இன்னும் முற்றிலும் அகலவில்லை என்பதற்கு தற்போது வரை பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்ததோடு பல்வேறு கட்சிகளும் தீண்டாமை ஒழிப்பிற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு விழிப்புணர்வை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தமிழ்நாட்டில் தீண்டாமை முற்றிலும் அகலும் வகையில் அரசு துறைகள் செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்து அது குறித்த பல்வேறு நடவடிக்கைகளையும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் திருக்கோயில்களில் சமபந்தி விருந்து நடைபெறுவது வழக்கம்.

அவ்வகையில் , காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் காஞ்சிபுரம் சுப்பிரமணியசாமி திருக்கோயில் என அழைக்கப்படும் காஞ்சி குமரக்கோட்டம் திருக்கோயிலில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது.


இதில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்தரய்யா,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களுடன் அமர்ந்து அறுசுவை உணவருந்தினர்.

இதற்கு முன்பாக திருக்கோவிலுக்கு வந்த அவர்களை செயல் அலுவலர் தியாகராஜன் வரவேற்று, சிறப்பு அர்ச்சனை செய்து  சாமி தரிசனம் மேற்கொள்ள வைத்தனர்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் பிரகாஷ்வேல் மற்றும் வட்டாட்சியர் காஞ்சனமாலா , திருக்கோயில் ஊழியர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஒவ்வொரு அரசு நிகழ்விலும் கடைபிடிக்கப்பட்டு வருவதும், அதனை ஏற்கும் அனைவரும் அதனை கடைபிடிக்க தவறி வருவது மனதிற்கு வருத்தத்தை அளித்து வருவதும், தமிழகத்தில் அடிக்கடி இது குறித்த நிகழ்வு தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் தென் மாவட்டங்களில் நடைபெறுவது பெரும் வருத்தத்தையும் , இதனை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைவது என்பது இப்போதைய நிலையாகும்.

Tags:    

Similar News