புரட்டாசி மாத இலவச ஆன்மீக சுற்றுப் பயணத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வைணவ தளங்களில் முக்கியமான தலங்களை மூத்த குடிமக்கள் தரிசிக்க வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2024-09-21 03:30 GMT

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச ஆன்மீக சுற்றுலா பேருந்தினை கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர் கலைச்செல்வி கலைச்செல்வி

இந்து சமய அறநிலைத்துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வைணவ திருத்தலங்களில் தரிசிக்கும் வகையில் ஓரு நாள் ஆன்மீக சுற்றுலா பயணத்தினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை சார்பில், மூத்த குடிமக்கள் தெய்வீகத் திருத்தலங்களை தரிசிக்கும் வகையில் சுற்றுலா பயணத் திட்டங்களை அறிவித்து வருகிறது.

ஏற்கனவே காசி ஆன்மீக சுற்றுப்பயணம், அதனை தொடர்ந்து அறுபடை வீடுகள் தரிசனம், ஆடி மாதத்தில் அம்மன் திருத்தலங்களில் தரிசனம் என பல திட்டங்கள் மூலம் மூத்த குடிமக்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஒரு திட்டமாக தமிழக அரசின் 50 லட்சம் நிதி உதவியுடன், புரட்டாசி மாதத்தினையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வைணவ திருத்தலங்களை தரிசிக்கும் வகையில் ஒரு நாள் சுற்றுலா பயணித்திட்டம் வகுக்கப்பட்டு இதில் 40 மூத்த குடிமக்கள் பயணம் செல்ல பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று முதல் புரட்டாசி சனிக்கிழமையொட்டி, வைணவ திருத்தல ஆன்மீக சுற்றுலா பயணத்தினை காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, மேயர் மகாலட்சுமி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியருடன் இணைந்து 40 ஆன்மீக சுற்றுலாப் பயணிகளும் வைகுந்த பெருமாளை தரிசனம் மேற்கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், விளக்கொளி பெருமாள், பாண்டவர் தூத பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் ஆகிய வைணவ திருத்தலங்களில் தரிசனம் மேற்கொண்டு மாலை 3 மணி அளவில் மீண்டும் காஞ்சியை வந்தடைவர்.

தொடர்ந்து ஆன்மீக பக்தர்களுக்காக இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருவது பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

என் திட்டத்தில் புரட்டாசி மாதத்தில் நான்கு சனிக்கிழமைகளிலும் இந்த ஆன்மீக சுற்றுப்பயணம் தமிழக முழுவதும் ஆயிரம் மூத்த குடிமக்களை இலவசமாக அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்க விழா நிகழ்வில் , வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன் திருக்கோயில் செயல் அலுவலர்கள் , ஆய்வாளர்கள் ஆன்மீக பக்தர்கள் என பல கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News