சுங்குவார் சத்திரம் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் 15வது நாளாக நீடிப்பு

15 வது நாளாக ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் சாம்சங் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-09-25 14:00 GMT

பதினைந்தாவது நாள் போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் மத்தியில் சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார் பேசினார்.

எந்த ஒரு தொழிற்சாலையும் தொழிலாளர்கள் போராட்டத்தினால் மூடுவதில்லை என சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தின் 15 வது நாள் கூட்டத்தில் சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள சாம்சங் இந்தியா தொழிற்சாலை ஊழியர்கள் ஊதிய உயர்வு தொழிற்சாலை அங்கீகாரம் மற்றும் எட்டு மணிநேர பணி உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்பதாம் தேதியில் இருந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


அவ்வகையில் இன்று 15 வது நாளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிற்சாலை ஊழியர்களிடம் சிஐடியு தொழிற்சங்க மாநில செயலாளர் முத்துக்குமார் பேசுகையில், நேற்று தலைமை செயலகத்தில் தொழிலாளர் நல செயலாளருடனா பேச்சுவார்த்தையில் எந்த ஒரு சமூக நிலையும் எட்டப்படவில்லை எனவும், இதனைத் தொடர்ந்து வருகிற ஒன்றாம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது எனவும் தமிழகம் முழுவதும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவான சுவரொட்டிகள் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஒட்டப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து செய்திகளார்களிடம் பேசுகையில், தொடர்ந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் தமிழகத்தில் தொழில் பின்னடைவு ஏற்படும் என ஜி டி ஆர் ஐ ஆய்வு தெரிவித்தது குறித்து கேட்டபோது, அரசு முன்வந்து சமூக பேச்சுவார்த்தை நடைபெற்றால் இந்த பிரச்சனைக்கு எளிதில் தீர்வு கிடைக்கும் எனவும், எந்த ஒரு தொழிற்சாலையும் தொழிலாளர்கள் போராட்டத்தால் மூடவில்லை எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News