காஞ்சிபுரம் : ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 481 பேர் மீது வழக்கு பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 481 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி .சுதாகர் தெரிவித்தார்.

Update: 2022-01-09 14:00 GMT

காஞ்சிபுரத்தில் ஊரடங்கு பணிகளை பார்வையிட்ட போலீஸ் எஸ்பி சுதாகர்.

ஒமிக்ரான் நோய் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசால் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் தலைமையில், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என சுமார் 1100 பேர் முழு ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறையினர் முக்கிய சாலைகளில் வலம் வந்தவாறு தேவையின்றி சுற்றிவரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து நோய் தொற்று விழிப்புணர்வு அவசியத்தை வலியுறுத்தினர்.

இதனால் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் நகரங்களில் அனைத்து கடைகளும் அடைக்ப்பட்டு  முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

மேலும், முழு ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி வீதிகளில் சுற்றிய சுமார் 481 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முழு உணர்வுடன் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து காவல் துறையினரையும் காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

Tags:    

Similar News