பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி

நெல்வாய் , ஏகனாபுரம், நாகப்பட்டு, பரந்தூர் உள்ளிட்ட கிராமங்களில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2024-10-13 11:15 GMT

ஏகனாபுரம் கிராமத்தில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்தும் செயலை கண்டித்து ஏகனாபுரம் நெல்வாய் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் , ஏகனாபுரம் உள்ளிட்ட 14 கிராமங்களை உள்ளடக்கிய பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க சுமார் 4800 ஏக்கர் பரப்பளவில் அமைக்க மாநில அரசு முடிவு செய்து அதற்கான நில எடுப்பு குறித்த அறிவிப்பு செய்திதாள்களில் வெளியிட்டது.


இதனை கண்டித்து ஏகனாபுரம் கிராம மக்கள் தங்கள் நிலம் மற்றும் குடியிருப்புகளை அரசு திட்டத்திற்கு தர மாட்டோம் என கடிதம் எழுதி பேரணியாக சென்று மாவட்ட வருவாய் (அலுவலர் நில எடுப்பு) அலுவலரிடம் கொடுத்து   தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இந்நிலையில் நெல்வாய், ஏகனாபுரம் கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளில் பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்தும் செயலில் ஈடுபடும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாதிக்கப்படும் கிராமங்களில் இன்று கருப்புக்கொடி ஏற்றி கண்டனத்தை வெளிப்படுத்த தமிழ்நாடு விவசாய சங்கம் போராட்டத்தை அறிவித்தது.

அவ்வகையில் ஏகனாபுரம் நெல்வாய் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புகளில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கருப்பு கொடியை வீட்டு முன்பு ஏற்றி உள்ளனர். மேலும் திருவிதிகளிலும் கருப்பு கொடியை தோரணங்களாக கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News