3 ஆண்டுகளாக சிமெண்ட் சாலைக்கு காத்திருக்கும் சிங்காடிவாக்கம் கிராம மக்கள்...!

சிங்காடிவாக்கம் ஊராட்சியில் ஐந்தாவது வார்டு பேருந்து நிறுத்தம் இடத்திலிருந்து பள்ளத் தெருவுக்கு பிரதான சாலை சேதம் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு

Update: 2024-10-12 12:15 GMT

வாலாஜாபாத் வட்டம், சிங்காடிவாக்கம் ஊராட்சி ஐந்தாவது வார்டு பகுதியில் சிமெண்ட் சாலை கூறி கடந்த மூன்று ஆண்டுகளாக காத்திருக்கும் நிலை உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சிங்காடிவாக்கம் கிராமம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது வார்டு பகுதி பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் பகுதிக்கு சிமென்ட் சாலை அமைத்து தர கோரி பல்வேறு மனுசனை அளித்துள்ளனர். 

பலமுறை இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து மனு கூறிய பதில் வருவது மட்டுமே உள்ள நிலையில் இதுவரை சிமெண்ட் சாலை அமைக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

கடந்த ஆகஸ்ட் மாதம் 2022-ல் ஞானவேல் என்பவர் அளித்த கோரிக்கை மனுவுக்கு வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய சிங்காடிவாக்கம் ஊராட்சியில் ஐந்தாவது வார்டில் கல்வெட்டு அருகில் இருந்து பள்ள காலனி தெரு வரை சிமெண்ட் சாலை அமைத்து தர கூறிய நிலையில் அதை தொடர்ந்து உதவி பொறியாளர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளதாகவும் அதன்படி ஒன்றிய குழுவில் தீர்மானம் எண். 277 ஆகஸ்ட் மாதம் இயற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து பணி தொடங்கப்பட்டு முடிக்கப்படும் என்பது மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் பிப்ரவரி மாதம் மீண்டும் இது குறித்து ஞானவேல் நினைவூட்டல் மனு அளித்த நிலையிலும் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வறிக்கையின் அடிப்படையில் சிமெண்ட் சாலைகள் வரும் நிதி ஆண்டில் ஊராட்சி பொது நிதியில் அமைத்து தரப்படும் என்ற விவரத்தை தெரிவித்ததாக மீண்டும் தெரிவித்துள்ளனர். 

பல முறை மனு அளித்தும் எந்த ஒரு செயலும் மேற்கொள்ளாமல் தகவல்களை மட்டும் தெளிவாக கூறி வருவது  மட்டுமே ஊராட்சி ஒன்றிய செயல்பாட்டு முறையாக இருக்கிறது எனவும், பொதுமக்களில் மனுவிற்கான எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை என்பது எழுத்து வடிவில் மட்டுமே உள்ளது பெரும் மன வருத்தத்தை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News