காஞ்சிபுரம் மாநகராட்சியில் தடம் பதித்த பாஜக பெண் வேட்பாளர்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பாஜக சார்பில் 21 வார்டில் போட்டியிட்ட பாஜக பெண் வேட்பாளர் விஜிலா அருண்பாண்டியன் வெற்றி பெற்றார்

Update: 2022-02-24 01:00 GMT

வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் விஜிலா அருண்பாண்டியன்.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு 21 வது உறுப்பினர் பதவிக்கான போட்டியில்  திமுக வேட்பாளர் ரதி ,  அதிமுக வேட்பாளரா உத்ரா,  பாஜக சார்பில் விஜிதா உள்ளிட்ட 6 பேர் போட்டியிட்டனர்.

இதில் விஜிதா 1183 வாக்குகளும் ,  திமுகவை சேர்ந்த ரதி 989 வாக்குகளும் , அதிமுகவை சேர்ந்த உத்ரா 649 வாக்குகளும் பெற்றனர்.

இதில் 194 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை சேர்ந்த விஜிதா அருண்பாண்டியன் வெற்றி பெற்றுள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பாஜக மாமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News