மாவட்டத்தில் முதலிடம், மாநிலத்தில் மூன்றாமிடம்; அசத்திய காஞ்சிபுரம் பள்ளி மாணவர்கள்

+2 அரசு பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 596 பெற்று சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Update: 2022-06-20 13:15 GMT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநிலத்தில் 3வது மதிப்பெண்ணும் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற இரு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய பள்ளி நிர்வாகிகள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற பிளஸ் 2 அரசு பொது தேர்வில் 13 ஆயிரத்து 818 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியானதில் 12, 819 மாணவ மாணவிகள் அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 106 மேல்நிலைப்பள்ளிகள் உள்ள நிலையில் 52 அரசுப் பள்ளிகளும் , 54 தனியார் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் காஞ்சிபுரம் சங்கரமடம் அருகில் இயங்கிவரும் சோழன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயின்று தேர்வு எழுதிய ஆர்.சீனிவாஸ் மற்றும் என். ரேவந்த்பாபு  ஆகிய இரு மாணவர்களும் 500 மதிப்பெண்களுக்கு 596 மதிப்பெண்கள் பெற்று இருவரும் மாநிலத்தில் மூன்றாம் இடத்திலும், மாவட்ட அளவில் முதல் இடத்திலும் இடம் பிடித்துள்ளனர். இவர்களுக்கு பள்ளி வளாகத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கி பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் கொண்டாடினர்.

Tags:    

Similar News