ஊரடங்கு தளர்வால் காஞ்சிபுரத்தில் அனைத்து கோயில்களும் திறப்பு

தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வு காரணமாக காஞ்சிபுரத்தில் அனைத்து திருக்கோயில்களும் திறக்கப்பட்டது.

Update: 2022-01-28 03:30 GMT

பக்தர்கள் வருகை குறைவால் வெறிச்சோடி காணப்படும் கோவில்.

தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து நடைமுறை படுத்தி வந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்தது காரணத்தினால் பல்வேறு தரவுகளை அறிவித்து இன்று முதல் செயல்படுத்த தமிழக அரசு அறிவித்தது.

கடந்த வாரங்களில் வெள்ளி சனி மற்றும் ஞாயிறுகளில் கோயில்கள் அனைத்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் மீண்டும் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதி அளித்தது.

மேலும் ஞாயிற்றுக்கிழமையில் அமல்படுத்தி வந்த முழு ஊரடங்கு விளக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கம்போல் இன்று காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து கோயில்களும் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் திறக்கப்பட்டது.

கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் குறைந்த அளவே காணப்பட்டனர். அதிக அளவில் விடுமுறை நாட்களை ஒட்டி வெளிமாநில பக்தர்கள் வரும் நிலையில் ஊரடங்கு விளக்கப்பட்டது. தெரியாத காரணத்தினால் வெளிமாநில பக்தர்கள் வருகை பெருமளவில் குறைந்து காணப்பட்டது. அனைத்து கோயில்களும் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News