அகில இந்திய தொழிற்சங்க வேலை நிறுத்தம்: 5 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கம்

அகில இந்திய வேலைநிறுத்தம் அறிவித்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்துகளை தவிர்த்து தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-03-28 02:15 GMT

ஓரிக்கை பணிமனை-1ல் வேலை நிறுத்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகள்.

தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிடுதல் மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுதல் பெட்ரோல் டீசல் எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்தால் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம் வரும் என அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் காஞ்சிபுரத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் பேருந்து பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் நகரில் தற்போது 30 சதவீத ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. காஞ்சிபுரம் 3 பணிமனைகளில் இருந்து சுமார் 140 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில் தற்போது வரை 10 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

வேலை நிறுத்தம் முன்பே அறிவித்து நிலையில் கூட பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் தொழிற்சாலை ஊழியர்கள் என அனைவரும் வழக்கம்போல் பேருந்து நிலையத்தில் கூடிய நிலையில் இருந்து இயக்கப்படாததால் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.

Tags:    

Similar News