காஞ்சிபுரத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்

காஞ்சிபுரத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2023-01-24 12:15 GMT
காஞ்சிபுரத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் மறியல் செய்வதற்காக ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஏ. ஐ. டி. யு. சி. சார்பில் மறியல் போராட்டம் மாநில குழு உறுப்பினரும் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ. எஸ். கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் காந்தி ரோடு தேரடி அருகில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மாநில குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ      ஏ.. எஸ் கண்ணன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய தொழிலாளர்கள்ள் போராடி பெற்ற வேலை பாதுகாப்பு சம்பள பாதுகாப்பு சமூக பாதுகாப்பு தொழிற்சங்க உரிமைகள் ஆகியவற்றிற்கான 44 சட்டங்களை நான்கு சட்ட தொகுப்பாக மோடி அரசு மாற்றி உள்ளதை வாபஸ் பெறுதல்.

240 நாட்கள் பணி புரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் 21,000 குறையாமல் மாத ஊதியம் வழங்க வேண்டும்.

தொழிலாளர் நல வாரியங்களில் சேர்ந்துள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் மாத ஓய்வூதியம் 6000 வழங்கிடவும், தொழிலாளர் நல வாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நிதி பலன்களை தாமதம் இன்றி வழங்கவேண்டும்,

முதியோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவி தொகை சீராய்வு செய்வதென்று தட்டிக் கழிக்க எடுத்துள்ள முயற்சியை அரசு கைவிட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த மறியல் போராட்டம் காஞ்சிபுரம் தேரடி அருகில் நடைபெற்றது .

மறியல் போராட்டத்தின் போது 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்ட போது விஷ்ணு காஞ்சி காவல் துறையினர் அவர்களை  வழிமறித்து கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

மறியல் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த நிலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியல் ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இப்போராட்டத்தில்  ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் கார்த்தி, மாவட்ட பொது செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News