காவந்தண்டலம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடாத அதிமுக

காவாந்தண்டலம் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட அதிமுக சார்பில் யாரும் இல்லாதது அதிர்ச்சியை அளித்துள்ளது.

Update: 2021-09-24 02:41 GMT

பைல் படம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில்  இரு கட்டங்களாக நடைபெறுகிறது.

இதிலுள்ள ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பான சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

பிற பதவிகளான கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் களுக்கு தனி சின்னங்கள் அளிக்கபட்டு வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும்  அதிமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்ட போதிலும் காஞ்சிபுரம் அடுத்த காவாந்தண்டலம் கிராமத்தில் அதிமுக கட்சி சார்பில் போட்டியிட எவரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கிராமத்தில் 869ஆண் வாக்காளர்களும், 932 பெண் வாக்காளர்களும் என 1801 வாக்குகள் உள்ளன. இதில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு பெண்கள் பொதுபிரிவு என போட்டியிடும் வகையில் உள்ளது.

இந்த கிராமத்தை உள்ளடக்கிய ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு மாகரல் கிராமத்தை சேர்ந்த  பெண் வேட்பாளர் அல்லிபக்தவச்சலம் என்பவர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நடைபெறவுள்ள 273 கிராமங்களில் இந்த காவாந்தண்டலம் கிராமத்தில் மட்டும் தான் அதிமுகவிற்கு ஒருவர் கூட கிடைக்கவில்லை என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

Tags:    

Similar News