வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பதிவு செய்யும் பணி தீவிரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்களை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது

Update: 2022-02-14 03:15 GMT

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் வேட்பாளர் முன்னிலையில் பதிக்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 156 பதவிகளுக்கு 814 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 63 ஆயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு நபர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 384 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குபதிவு வாக்குச்சீட்டு அல்லாமல் வாக்குபதிவு இயந்திரம் மூலம் வாக்குபதிவு நடைபெறவுள்ளது. வாக்களிக்க ஏதுவாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் சின்னம் பெயர் உள்ளிட்டவைகள் பதிவு செய்யும் பணி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

மாநகராட்சிக்கு 218 வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வேண்டிய இயந்திரங்களுக்கு வாக்காளர் பட்டியலுடன் வேட்பாளர் முன்னிலையில் பதிந்து மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.

அந்த வார்டு வாக்கு சாவடிக்கான இயந்திரத்தின் சீரியல் எண் வழங்கப்பட்டு மற்றும் அவர்கள் முன்னிலையில் வாக்குபதிவு இயந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டுகிறது.

Tags:    

Similar News