மாநில அளவில் வெற்றி பெறும் 20 மாணவர் களுக்கு வெளிநாடு கல்வி சுற்றுலா வாய்ப்பு

Talent Competition -மாணவர்களின் தனி கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் , பள்ளி கல்வித்துறை சார்பில் திறமைகளை வெளிப்படுத்தும் கலைத் திருவிழா

Update: 2022-10-20 08:15 GMT

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் கலைத் திருவிழாவில் பங்கேற்க நடனம் கற்கும் திருமுக்கூடல் அரசு பள்ளி மாணவிகள்

Talent Competition -மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி,  வட்டாரம்,  மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைத் திருவிழா நடத்தப்படும் என  கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும் பள்ளிக்கல்வி செயல்முறைகளின் படி கலை பண்பாட்டு கொண்டாட்டங்களையும் ஒருங்கிணைப்பதை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இத்திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கலையரங்கம் நிகழ்வின் கலை சார்ந்த பயிற்சிகளும் கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்களது தனி திறமையை அறிந்து அதற்கு ஏற்ற பயிற்சி பெற்று போட்டியில் பங்கேற்கும் விதமாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் பதினொன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இவர்களுக்கு தங்கள் பயிற்சிக்கு ஏற்ற ஆசிரியர்கள் மற்றும் பிற துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்போ போட்டிகள் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரம் பள்ளி அளவிலும், டிசம்பர் மாதம் நான்காம் வாரம் வட்டார அளவிலும் ஜனவரி மாதம் முதல் வாரம் மாவட்ட அளவிலும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரம் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் மற்றும் கலையரசன் கலையரசி என்ற விருதுகளும் மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும்.மேலும் மாநில அளவில் இவ்வாறு வெற்றி பெற்ற 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்  எனவும் அறிவித்துள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  ஒவ்வொரு வாரமும் இரண்டு வகுப்புகள் இதற்காக ஒதுக்கப்பட்டு நடனம் நாட்டுப்புற கலைகள், இசை பயிற்சி உள்ளிட்டவைகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 27 கலைத் திறன் கொண்ட ஆசிரியர்கள் நியமிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் தற்போது 18 பேர் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நியமிக்கப்பட்டு ஒரு ஆசிரியருக்கு மூன்று பள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் கல்வி கற்கும் போதே அவர்களின் தனித் திறமைகளை கண்டறிந்து அதன் மூலம் அவர்களை பள்ளி அளவிலும் மாவட்ட அளவில் வட்டார அளவிலும் மாநில அளவிலும் சிறப்படையைச் செய்து அதன் மூலம் அவர்களின் திறமைகளை உலகறியச் செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி தகவல்  தெரிவித்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News