காஞ்சிபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 709 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Update: 2024-09-07 11:30 GMT

காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை வைத்து பூஜை நடத்தப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட மற்றும் நகர இந்து முன்னணி சார்பில் காஞ்சிபுரத்தில் 34ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில்,காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகே காஞ்சிபுரம் மாவட்ட, மற்றும் நகர இந்து முன்னணி சார்பில் 34ம்ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவானது மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


அதனையொட்டி 10 அடி உயரமுள்ள விநாயகருக்கு இந்து முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எஸ். சந்தோஷ்,ஜே.ஞானவேல் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் மலர்கள் தூவிட,விநாயகர் துதிகள் பாடியபடி,சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு,தீபாராதனைகள் காட்டப்பட்டு வந்திருந்த ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழாவானது மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் இந்து முன்னணி பேரியக்கத்தின் வழக்கறிஞர்கள் பிரிவு சத்யநாராயணன் அன்பரசன், இளைய குமார், பழனி,ஸ்ரீதர், இந்து முன்னணியின் தாய் இயக்கம் ஆர்‌‌எஸ்.எஸ் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பாஜகவின் முன்னாள் நகர தலைவர் ஜெகதீசன், முன்னாள் நகர செயலாளர் செவிலிமேடு கே.செந்தில், பாஜகவின் ராஜா,பரதன் மற்றும் இந்து முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட, நகர நிர்வாகிகள், காஞ்சிபுரம் வாழ் விநாயகர் பக்தர்களும் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News