75 வது சுதந்திர தினம் : தூய கைத்தறி பட்டு மூலம் நெசவு செய்யப்பட்ட தேசிய கொடி

24 மணி நேரம் தொடர்ச்சியாக பணிபுரிந்து தூய பட்டு கொண்டு கைத்தறி நெசவாளர் குமரவேல் மூலம்‌ வடிவமைத்து உருவாக்கிய தேசிய கொடி .

Update: 2022-08-15 01:15 GMT

தூய பட்டு கைத்தறி நெசவு மூலம் உருவாக்கப்பட்ட தேசிய கொடி.

இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில் , காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தோப்புத் தெருவை சேர்ந்த நெசவாளர் குமரவேல், இவரது மனைவி கலையரசி எம் எஸ் சி., பி.எட் பட்டதாரி.

இவர்கள் தற்போதைய இளைய தலைமுறை காலத்திற்கு ஏற்ப பட்டு சேலைகளை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து தருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாட வீடுகள் தோறும் கொடி ஏற்றி தேசப்பற்றை பறைசாற்ற ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவித்த வேண்டுகோளின்படி கடந்த இரண்டு நாட்களாக அனைத்து வீடுகளிலும் , அலுவலகங்களிலும் அரசு விதிகளுக்கு உட்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையிலும், அதே நேரத்தில் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்ட நிலையில், வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்ற கைத்தறி மூலம் உருவாக்க காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த நெசவாளர் குமரவேலை தொடர்பு கொண்டுள்ளனர். 24 மணி நேரத்தில் 2*3 அளவு கொண்ட தேசிய கொடியினை வடிவமைத்து , தொடர்ச்சியாக தூய பட்டு கொண்டு கைத்தறி மூலமாக நெசவாளர் கொண்டு நெய்து வழங்கியுள்ளனர்.

பெரும்பாலும் பட்டு சேலை உருவாக்குதலில் ஓரு புறம் மட்டுமே உருவங்கள் தெரியும் நிலையில், இதை கவனத்தில் கொண்டு இருபுறமும் தேசிய கொடி பார்வைக்கு தெரியும் வகையில் இந்த தேசியகொடி உருவாக்கப்பட்டது என்பது சிறப்பாகும்.

Tags:    

Similar News