காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ 2.86 கோடி மதிப்பீட்டிலான நல திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 225 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2023-05-25 16:22 GMT

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 225 பயனாளிகளுக்கு ரூ. 2.86 கோடி மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர் ,  ஸ்ரீபெரும்புதூர் , வாலாஜாபாத் , குன்றத்தூர் ஆகிய ஐந்து தாலுகா அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் 1432 பசலிக்கான முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கடந்த 16ஆம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடைபெற்றது.

அவ்வகையில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாக பெறப்படும் என விளம்பரம் செய்யப்பட்டு ஆறு நாட்கள் வருவாய் குறுவட்டம் தோறும் நடைபெற்றது.

அவ்வகையில் வருவாய் தீர்வாய முகாமில் பொதுமக்களிடமிருந்து 1135 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 102 மனுக்கள் இது உடனடி விசாரணை மேற்கொண்டும், இதுர மனுக்களை தீர்வு கண்டதில் 225 தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 134 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா 25 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை, முழுப்புலம் மற்றும் உட்பிரிவு மாற்றம் செய்யப்பட்ட வகையில் 41 நபர்களுக்கு பட்டா , 25 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் என மொத்தம் ரூபாய் 2 கோடி 86 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் மேற்படி மனுக்களில் 54 இதர துறைகள் சார்ந்த மனுக்கள் அன்றைய தினமே சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மீதம் நினைவில் உள்ள 979 மனுக்கள் மீது விரைவில் விசாரணை மேற்கொண்டு விசாரணை அடிப்படையில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, வட்டாட்சியர் புவனேஸ்வரன் , மேயர் மகாலட்சுமி யுவராஜ் , துணை மேயர் குமரகுருநாதன் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நித்தியா சுகுமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News