24 குற்ற வழக்குகளில் ரூ 1.18கோடி நகை, பொருட்கள் மீட்பு: எஸ்.பி சுதாகர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 குற்ற வழக்குகளில் ₹1.18 கோடியிலான நகை, பொருட்கள் மீட்கப்பட்டதாக எஸ்.பி சுதாகர் தெரிவித்தார்.

Update: 2021-07-31 08:00 GMT

காஞ்சிபுரத்தில் 24 குற்றவழக்குகளில் போலீசாரால் ரூ1.18  கோடி மதிப்புள்ள நகை மற்றம்  பொருட்கள் மீட்கப்பட்டது.

இதன்பின் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர், கடந்த இரு மாதங்களில் திருட்டு மற்றும் கொலை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் 24 குற்ற வழக்குகளில் 19 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 55 சவரன் தங்க நகைகள், 2.2 கிலோ வெள்ளி பொருட்கள் , 10 இருசக்கர வாகனங்கள், 1 ஆடி கார் என ₹1.18 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இத்தாண்டில் தற்போது வரை 35ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கபட்டுள்ளதாகவும், பல்வேறு குற்றவாளிக்கு ஈடுபட்ட 109 ரவுடிகள் கைதாகி உள்ளனர் என தெரிவித்தார்.

குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளின் மீது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் , ஆய்வாளர்கள்‌ என பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News