குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.சுதாகருக்கு குவியும் மக்கள் பாராட்டு..! .

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 117 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என, காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார். இதையடுத்து குற்றங்களை களையும் நேர்மையான அதிகாரியான அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Update: 2022-07-02 14:30 GMT

குற்றங்களை சட்டப்படி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை எஸ்.பி.சுதாகர்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆறு மாத காலத்தில் காவல்துறையின் தீவிர கண்காணிப்பில்  கள்ளத்தனமாக கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தில் உள்ள காவல்நிலைய எல்லைக்குள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுமார் 117குற்றவாளிகள் தீவிர கண்காணிப்பு மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 44.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி குற்றவாளிகள் மீது 103 வழக்குகள்  பதிவுசெய்யப்பட்டு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர் எனவும் எஸ்.பி சுதாகர் புள்ளி விவரங்களை வெளியிட்டார்.

மேலும், கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது எனவும், இதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் எஸ்.பி சுதாகர் தெரிவித்தார்.

இதையடுத்து, இளம் சமூகத்தின் கனவுகள், லட்சியங்களை சீரழிக்கும் போதை பொருள் விற்பனையை தடுத்து, சட்டப்படி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியுள்ள காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சுதாகருக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News