ஊரக உள்ளாட்சி தேர்தல்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 1,132 வேட்புமனு தாக்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று 1132 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2021-09-21 14:00 GMT

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கடந்த 15ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் , வாலாஜாபாத்,  உத்திரமேரூர்,  ஸ்ரீபெரும்புதூர்,  குன்றத்தூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் தங்கள் வேட்பு மனுக்களை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்து வந்தனர்.

6வது நாளான  இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 132 பேர் தங்கள் வேட்புமனுக்களை ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களில் தாக்கல் செய்துள்ளனர்.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 12 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 70 பேரும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 185 பேரும்,  கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 865 பேர் என  மொத்தம் 1132 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 2321 பதவிகளுக்கு 6023 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News