ரூ.20,000 ஊக்கத் தொகையுடன் கூடிய மகளிருக்கான பயற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாணவிகள், பெண் ஆசிரியர்கள், மகளிர் சமூக ஆர்வலர்களுக்கான பயிற்சித் திட்டங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Update: 2023-05-27 02:21 GMT

பைல் படம்

மாணவிகள், பெண் ஆசிரியர்கள், மகளிர் சமூக ஆர்வலர்களுக்கான பயிற்சித் திட்டங்களுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. முதல் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மகளிருக்காக நடத்தப்படும் இந்தப் பயிற்சித் திட்டம் 03.07.2023 முதல் 31.08.2023 வரை இரண்டு மாதங்கள் நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சி திட்டத்தில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் படிப்பவராகவோ அல்லது பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.

21 வயது முதல் 40 வயது வரையிலானவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூபாய் 20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தில்லியில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள், பயிற்சியில் கலந்து கொள்ள தில்லி சென்று வருவதற்கான மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி ரயில் கட்டணங்கள் வழங்கப்படும்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முக்கியத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் குறித்து இந்தப் பயிற்சித் திட்டம் நடத்தப்படுகிறது.

இதில் சேர விரும்புவர்கள் https://docs.google.com/forms/d/1UWK5W_07pRxL8yekBy6DbjAg225Vd_WJwfnc4nReTU/viewform?edit_requested=true என்ற இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 29.05.2023 இரவு மணி 11.59 க்குள் சமர்பிக்க வேண்டும்.  

இன்டர்ன்ஷிப் திட்டத்தின் விரிவான வழிகாட்டுதல்களை அமைச்சகத்தின் இணையதளத்தில் பார்க்கலாம் https://wcd.nic.in/schemes/internship-scheme

மேலும் விவரங்கள்/கேள்விகளுக்கு, விண்ணப்பதாரர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை என்ற ஐடியில் உள்ள மின்னஞ்சல் மூலம் புள்ளியியல் பணியகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Internship Program for Women Students / Scholars / Social Activists / Teachers 

படிவத்துடன் கூடிய விரிவான அறிவிப்பை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் பார்க்கலாம்.

https://wcd.nic.in/sites/default/files/Internship Advertisment July-Aug.pdf 

Tags:    

Similar News