இந்திரா காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு!
குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்திரா காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு
குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
குமாரபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக இந்தியாவின் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நகர காங்கிரஸ் அலுவலகம் முன்பு, நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில், இந்திரா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் இந்திரா காந்தி நாட்டிற்கு செய்த சேவைகள் குறித்தும், ஆட்சியின் சிறப்புக்கள் குறித்தும் பலரும் பேசினார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர பொருளாளர் சிவராஜ், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் நகர துணைத் தலைவர் காளியப்பன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் தங்கராஜ், மாவட்ட காங்கிரஸ் செயலாளர்கள் மனோகரன், ஆறுமுகம், முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன், மற்றும் 33 வார்டுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்று இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முடிவில் நகர காங்கிரஸ் செயலாளர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.