ஈரோடு மாநகராட்சிக்கு வரி செலுத்தாததால் ஒரே நாளில் 20 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

ஈரோடு மாநகராட்சிக்கு வரி செலுத்தாததால் ஒரே நாளில் 20 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.;

Update: 2025-02-13 09:30 GMT

ஈரோடு மாநகராட்சி.

ஈரோடு மாநகராட்சிக்கு வரி செலுத்தாததால் ஒரே நாளில் 20 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகையினங்கள், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் மற்றும் இதர வரியினங்கள் உடனடியாக செலுத்துமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதற்கிடையில், ஈரோடு மாநகராட்சி 3ம் மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் சிலர் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாமல் இருந்தது தெரியவந் தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி, மாநகராட்சி உதவி ஆணையாளர், உதவி வருவாய் அலுவலர், உதவி பொறியாளர்கள் ஆகியோர் 3ம் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் வரி செலுத்தாமல் இருந்த 20 வீடுகளின் குடிநீர் குழாய் இணைப்பை நேற்று ஒரே நாளில் துண்டித்து நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

Similar News