அதிமுகவின் 75 சதவீத வாக்குகள் திமுகவுக்கு கிடைத்துள்ளன: ஈரோடு கிழக்கு எம்எல்ஏ சந்திரகுமார் பேட்டி

அதிமுகவின் 75 சதவீத வாக்குகள் திமுகவுக்கு கிடைத்துள்ளன என்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ சந்திரகுமார் கூறினார்.;

Update: 2025-02-13 10:45 GMT

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ சந்திரகுமார்.

அதிமுகவின் 75 சதவீத வாக்குகள் திமுகவுக்கு கிடைத்துள்ளன என்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ சந்திரகுமார் கூறினார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றார். இதையடுத்து வாக்களித்த வாக்காளர்களை நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து பேசினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் "அவரது வெற்றி போலி" என குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி அதிமுக ஆட்சியில் நடந்த இடைத்தேர்தலில் இவ்வாறு போலி வெற்றியை அதிமுக பெற்றிருக்கலாம். ஆனால் எனது வெற்றி உண்மையானது.

ஏறக்குறைய ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றுள்ளேன். அதிமுகவின் 75 சதவீத வாக்குகள் திமுகவுக்கு கிடைத்துள்ளது. எனவே போலி என்பது நிராகரிக்க கூடியது.

இத்தேர்தலில் முதல்வரின் வளர்ச்சி மற்றும் நல திட்டங்களுக்கு ஆதரவாக மக்கள் பெருவாரியாக திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். அது மட்டும் அல்லாமல் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமியின் சேவைகளுக்காகவும் வாக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சமயத்தில் மக்கள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மனு அளித்தனர். இன்னும் 15 நாட்களுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீண்ட கால பிரச்சினைகளை ஓராண்டு காலத்திற்குள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனது செயல்பாடுகளை 15 நாட்களுக்குள் பாருங்கள் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News