அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வனப்பகுதியில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்

Thanthai Periyar Wildlife Sanctuary-ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வனப்பகுதியில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-20 05:00 GMT

வனவிலங்கு சரணாலயம் (பைல் படம்).

அந்தியூர், கோபி வனப்பகுதியில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thanthai Periyar Wildlife Sanctuary-சட்டப்பேரவையில் இன்று தொடங்கி நடந்துவரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024-க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். அவர் தனது பட்ஜெட் உரையில், ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் பெயரில் வனவிலங்கு சரணாலயம் புதியதாக அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

நீலகிரி உயிர்மண்டலக் காப்பகத்தை தென் காவிரி காட்டுயிர் சரணாலயத்துடன் இணைக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் வனப்பகுதிகளை உள்ளடக்கிய 80,567 ஹெக்டேர் பரப்பில் ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ தமிழ்நாட்டின் 18வது சரணாலயமாக உருவாக்கப்படும். விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News