ஈரோட்டில் நாளை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நரம்பியல் நிபுணர்களின் சங்க மாநில மாநாடு

Erode news- நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நரம்பியல் நிபுணர்களின் சங்க மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற உள்ளது.;

Update: 2023-11-30 04:15 GMT

Erode news- செய்தியாளர்களை சந்தித்த டான் கான் 2023 ஏற்பாட்டுக் குழு  தலைவர் டாக்டர் செந்தில்வேலு, செயலாளர் டாக்டர் கணேஸ்வரன்.

Erode news, Erode news today- நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நரம்பியல் நிபுணர்களின் சங்க மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நரம்பியல் நிபுணர்களின் சங்க மாநில மாநாடு (TAN CON 2023) நாளை முதல் 3 நாட்களுக்கு ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள ஹோட்டல் டர்மரிக்கில் நடக்க உள்ளது. இது சமயம் ஏறத்தாழ 300 மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர். நாளை காலை காலை முதல் மாலை வரை தொடர் மருத்துவ கல்வி (CME) நடக்கும். மாலை 4 மணியளவில் துவக்க விழா நடக்க உள்ளது. அது சமயம் டான் கான்  செயலாளர், தலைவர் கலந்து கொள்ள உள்ளனா்.

சிறப்பு விருந்தினராக சக்தி தேவி அறக்கட்டளையின் தலைவர்கள் துரைசாமி மற்றும் சாந்தி, துரைசாமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். கெளரவ விருந்தினர்களாக ஈரோடு மருத்துவக்கல்லூரி டீன் மரு.வள்ளி சத்தியமூர்த்தி, மரு.அபுல் ஹசன், மரு.செந்தில்வேலு ஆகியோர் பங்கேற்கின்றனர். மரு.பார்த்திபன் துரைசாமி ஆகியோர் கலந்து இந்த மாநாட்டில் ஏறத்தாழ 100 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பிக்க உள்ளனர்.

மேலும் வாத நோய், வலிப்பு நோய் தலைவலி, தலைக்காயம் மற்றும் இதர மூளை நரம்பியல் நோய்கள் பற்றி நிபுணர்களின் கருத்துரை மற்றும் கலந்துரையாடல் நடக்க உள்ளது. 3ம் தேதி காலை மணிக்கு ஹோட்டல் டர்மரிக்கில் இருந்து புறப்பட்டு ("RUN FOR BRAIN" 6160TD) மினி மாரத்தான் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை ஏற்பாட்டுக்குழு தலைவர் மரு.செந்தில்வேலு, செயலாளர் மரு.கணேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News