ஈரோடு வேளாளர் மருந்தியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு
ஈரோடு வேளாளர் மருந்தியல் கல்லூரியில் தடுப்பூசி பற்றிய வதந்திகளை தகர்த்தல் மற்றும் தற்போதுள்ள தடுப்பூசிகளின் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது;
தேசிய அளவிலான கருத்தரங்கு ஈரோடு வேளாளர் மருந்தியல் கல்லூரியில் நடைபெற்றது.
ஈரோடு வேளாளர் மருந்தியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
ஈரோடு வேளாளர் மருந்தியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒருநாள் தேசிய அளவிலான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கருத்தரங்கு ‘தடுப்பூசி பற்றிய வதந்திகளை தகர்த்தல் மற்றும் தற்போதுள்ள தடுப்பூசிகளின் பாதுகாப்பை அதிகரிப்பது’ என்ற தலைப்பில் கஸ்தூரிபா உள் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சரவணகுமார் வரவேற்றார். வேளாளர் அறக்கட்டளை தலைவர் ஜெயக்குமார், செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக புதுச்சேரி முனைவர் கவிமணி, டாக்டர் பன்னீர், பெங்களூரை சேர்ந்த டாக்டர் அஜய் கலஞ்சனா மொன்னப்பா, குன்னூர் டாக்டர் சிவானந்தப்பா ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இந்த கருத்தரங்கில் தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கின் முடிவில் கல்லூரி துணை முதல்வர் முனைவர் பார்த்திபன் நன்றி கூறினார்.