ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: 2 நாளில் 75,288 பேருக்கு பூத் சிலிப் விநியோகம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, 2 நாளில் 75 ஆயிரத்து 288 பேருக்கு பூத் சிலிப் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2025-01-27 12:45 GMT

ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட மணல்மேடு பகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, 2 நாளில் 75 ஆயிரத்து 288 பேருக்கு பூத் சிலிப் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2,27,546 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு, 237 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று பூத் சிலிப் (வாக்காளர் தகவல் சீட்டுகள்) வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்று (26ம் தேதி) 40,429 வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2வது நாளான இன்று (27ம் தேதி) 34,859 வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில், 2 நாளில் மொத்தம் 75 ஆயிரத்து 288 வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News