அந்தியூரில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்திக்கு மணிமண்டபம்

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் ஊராட்சியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை (நேற்று) தொடங்கியது.;

Update: 2023-11-29 00:45 GMT

Erode news- மகாத்மா காந்திக்கு மணிமண்டபம் அமைக்கும் பணியை திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன், எம்எல்ஏக்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Erode news, Erode news today- அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் ஊராட்சியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை (நேற்று) தொடங்கியது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் ஊராட்சி காந்தி நகரில் இந்திய அளவில் இரண்டாவது சிலையாகவும், தமிழகத்தில் முதல் சிலையாகவும் கடந்த 74 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் முழு உருவச் சிலை உள்ளது. இப்பகுதியில் காந்திக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

இதனையடுத்து, நேற்று காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன், எம்எல்ஏக்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்) ஆகியோர் பங்கேற்று மணிமண்டபம் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சித் தலைவர்கள் சரவணன் (மைக்கேல்பாளையம்), குருசாமி (சங்கராபாளையம்), அந்தியூர் பேரூராட்சித் தலைவர் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவர் ஏ.சி.பழனிசாமி, காங்கிரஸ் முன்னாள் வட்டாரத் தலைவர் நாகராஜா, சிபிஎம் தாலுக்கா செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News