ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ.விற்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ் .இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-03-20 10:22 GMT

இளங்கோவன் எம்.எல்.ஏ.விற்கு கொரோானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம்  அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவருமான  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிறுத்தப்பட்டடார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிட்டார் இதில் இளங்கோவன் தென்னரசுவை விட கூடுதலாக  66 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.

இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். அதன் பின்னர் இளங்கோவன் டெல்லிக்கு சென்றார். கடந்த 15ம் தேதி டெல்லியிலிருந்து ஈ.வி.கே.எஸ் .இளங்கோவன் சென்னை வந்துள்ளார். அதன்பிறகு அவருக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஏற்கனவே  பைபாஸ் சர்ஜரி மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவரை டாக்டர்கள் மிகவும் கவனமாக கண்காணித்து வந்தார்கள். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கைகள் வெளியிடப்பட்டது. மேலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாவும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று போரூர் ராமச் சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் “ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் நலம் பெறுவார்” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நெஞ்சு வலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News