தாளவாடி அருகே வழி தவறி கிராமத்திற்குள் புகுந்த புள்ளி மான்

Erode news- ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே வனப்பகுதியிலிருந்து வழி தவறி கிராமத்திற்குள் புகுந்த புள்ளி மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2024-05-05 08:15 GMT

Erode news- வழி தவறி கிராமத்திற்குள் புகுந்த புள்ளி மானை படத்தில் காணலாம்.

Erode news, Erode news today- தாளவாடி அருகே வனப்பகுதியிலிருந்து வழி தவறி கிராமத்திற்குள் புகுந்த புள்ளி மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

எந்த ஆண்டு இல்லாத வகையில் இந்த ஆண்டு வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. வனவிலங்குகள் உணவு, தண்ணீரை தேடி அருகில் இருக்கும் கிராமங்களுக்குள் நுழையும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமான் வழித் தவறி அருள்வாடி என்ற கிராமத்திற்குள் புகுந்தது. அப்போது, அங்கிருந்த தெரு நாய்கள் புள்ளி மானை துரத்தியதில், புள்ளிமான் அங்கும், இங்குமாக பதற்றத்துடன் ஓடியது.

இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் தெரு நாய்களை விரட்டியடித்து புள்ளி மானை மீட்டனர். பின்னர், ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News