ஈரோடு: உற்சாகமாக பொங்கலை கொண்டாடிய மக்கள்

erode news, erode news today-பொங்கல் பண்டிகையை ஈரோடு மாநகரில் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Update: 2023-01-16 06:45 GMT
erode news, erode news today- கலைத்தாய் அறக்கட்டளை சார்பில், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையோரம் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

erode news, erode news today- பொங்கல் பண்டிகையை ஈரோடு மாநகரில், மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, இயற்கைக்கு குறிப்பாக சூரியனுக்கு விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் நன்றி செலுத்தும் நாளாக கருதி வணங்கப்படுகிறது. இதையொட்டி நேற்று அதிகாலையே, வீடுகளில் கற்களை அடுப்பாக்கி, மண் பானையில் பொங்கலிட்டு பொங்கல் வைத்தனர்.


தேபோல் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஆலைகள், வாகன ஷோரூம்கள் உள்ளிட்டவற்றிலும் ஊழியர்கள் சார்பில், பொங்கல் வைத்து கொண்டாடினர். பெரும்பாலும் கைத்தறி புடவைகள், வேட்டி, சட்டை அணிந்து நண்பர்கள், உறவினர்கள் மட்டுமின்றி அனைவருடனும் வாழ்த்துகளை பரிமாறி கொண்டாடினர்.


கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரையோரம், கலைத்தாய் அறக்கட்டளை சார்பில் தமிழர்களின் ஐந்து  வகை நிலங்களை பறைசாற்றும் விதமாக, ஐந்து வகை பொங்கலிட்டனர். பின்னர் பசு, காளை, கரும்பு, விளை பொருட்கள், கலை பொருட்களை வைத்து சூரிய வழிபாடு நடத்தினர்.


பின் தப்பாட்டம், ஒயிலாட்டம், சாட்டை, குச்சியாட்டம், பெரிய கம்பாட்டம், கோலாட்டம், கரகாட்டம், சிலம்பம் என ஐந்து நிலங்களுக்குரிய கலைகளை ஆடி காட்டினர். சிறுவர், சிறுமியர், பெண்கள் உள்ளிட்ட பலர்  ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதேபோல் மாநகரின் பல்வேறு இடங்களிலும், பொங்கலை முன்னிட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.

Tags:    

Similar News