சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்; இன்றைய விலை நிலவரம்

Erode news, Erode news today-ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1,470-க்கு விற்பனையானது.

Update: 2023-01-07 09:00 GMT

Erode news, Erode news today- இன்று மல்லிகைப்பூ கிலோ விலை, ரூ. 1470 ஆக இருந்தது. (கோப்பு படம்)

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தாண்டம்பாளையம், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, ராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், 1000 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூ, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் பூக்கள், சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும், விமானம் மூலம் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த பூ மார்க்கெட்டில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இன்று (07.01.2023) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு;

மல்லிகைப்பூ - ரூ‌. 1,470 ,

முல்லைப்பூ - ரூ.1,060 ,

காக்கடா - ரூ.600 ,

செண்டுமல்லி - ரூ.67 ,

கோழிக்கொண்டை - ரூ.105 ,

ஜாதிமுல்லை - ரூ.750 ,

கனகாம்பரம் - ரூ.400 ,

சம்பங்கி - ரூ.50 ,

அரளி - ரூ.220 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.100-க்கும் விற்பனையானது. 

அதேபோல், நேற்றைய (06.01.2023) நிலவரப்படி:- 

மல்லிகைப்பூ - ரூ.1,260 ,

முல்லைப்பூ - ரூ.1,040 ,

காக்கடா - ரூ.575 ,

செண்டுமல்லி - ரூ.80 ,

கோழிக்கொண்டை - ரூ.100 ,

ஜாதிமுல்லை - ரூ.750 ,

கனகாம்பரம் - ரூ.410 ,

சம்பங்கி - ரூ.70 ,

அரளி - ரூ.280 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News