ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 129.60 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 129.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.;

Update: 2023-12-10 10:56 GMT

மழை (கோப்புப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 129.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே மாவட்டத்தில் நேற்றும் (சனிக்கிழமை) பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பவானிசாகர் பகுதியில் 36.00 மீ.மீ. மழை அளவு பதிவாகி இருந்தது. 

மாவட்டத்தில் நேற்று (டிச.9) சனிக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (டிச.10) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் (மில்லி மீட்டரில் )பின்வருமாறு:-  

ஈரோடு - 2.00 மி.மீ ,

அம்மாபேட்டை - 4.20 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் - 6.00 மி.மீ ,

கோபிசெட்டிப்பாளையம் - 17.20 மி.மீ ,

கொடிவேரி - 35.00 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 6.20 மி.மீ ,

சத்தியமங்கலம் - 23.00 மி.மீ ,

பவானிசாகர் - 36.00 மி.மீ ,

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு 129.60 மி.மீ ஆகவும், சராசரியாக 7.20 மி.மீ ஆகவும் மழையளவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News